செய்திகள்

கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?

நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கமலின் 234வது படம் குறித்து, “நாயகனை மிஞ்சும் ஒரு படத்தில்தான் நாங்கள் இணைய இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம்” எனக் கமல்ஹாசன் கூறியிருந்தார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன் தாராவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் இப்படத்தின் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கமலின் பிறந்தநாளான நவ.7இல் அறிமுக விடியோவினை வெளியிட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

SCROLL FOR NEXT