செய்திகள்

திருமணமாகி 13 ஆண்டுகளா? கணவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக நடித்த சுஜிதா தனுஷ் தனது கணவருடன் திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக நடித்த சுஜிதா தனுஷ் தனது கணவருடன் திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுஜிதா. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால், பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்நதுள்ளார் சுஜிதா. இந்தத் தொடரின் இறுதிப்படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2வது பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்ததுடன் சுற்றுலாவுக்குச் சென்றார். அதன் புகைப்படங்களையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 

சுஜிதா தனுஷ்

தற்போது திருமணநாளையொட்டி தனது கணவருக்காக உருக்கமாகப்  பதிவிட்டுள்ளார். தனது மகனுடன் கோயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இணைத்துள்ளார்.

நடிகை சுஜிதாவுக்கும் தனுஷ் என்பவருக்கும் 2010ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சுஜிதா நடிப்பதற்கு களமிறங்கினார். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும், இன்னும் தனது உடலைப் பேணி காக்கும் விதம் அவரின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரின் உழைப்பை பலர் பாராட்டியும் வருகின்றனர். 

2011ஆம் ஆண்டு சின்னத்திரை விருது, சிறந்த துணை நடிகை விருதுகளை சுஜிதா வென்றுள்ளார். 1987ஆம் ஆண்டு சுஜிதாவுக்கு நந்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT