செய்திகள்

வாணி போஜன், பிரியா பவானி வரிசையில் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி!

பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி, சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடியுள்ளார். 

DIN

பூவே உனக்காக தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ராதிகா பிரீத்தி, வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்கவுள்ளார். இதனால், நடிகை வாணி போஜன், பிரியா பவானி சங்கர் வரிசையில் தற்போது ராதிகா பிரீத்தியும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

சன் தொலைக்காட்சியில் 2020 முதல் 2022 வரை பூவே உனக்காக தொடர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர் ராதிகா பிரீத்தி. 

இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து மாடலிங் துறையிலும் இருந்து வந்தார். 

ராதிகா பிரீத்தி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி, சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடியுள்ளார். 

கன்னட மொழியில் பன்டா (panta) என திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகுதான் தமிழில் பூவே உனக்காக தொடரில் நடித்தார். தற்போது தமிழில் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார். 

சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் பில்டப் திரைப்படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT