செய்திகள்

சூர்யா - 43 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

DIN

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், சூர்யா - 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் நாளை(அக்.26) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT