செய்திகள்

நம்பிக்கையும் மகிழ்ச்சியும்...: மலையாளப் படத்தினை பாராட்டிய ஆமிர் கான்! 

பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர் கான் மலையாளப் பட இயக்குநருக்கு குறுஞ்செய்தியின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

ஆமிர் கானின்  நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஆமிர்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ஏகேபி (ஆமிர் கான் புரடக்‌ஷன்ஸ்) தயாரிப்பில் ‘லாகூர், 1947’ என்ற தலைப்பில் புதிய படத்தினை தயாரிக்கிறார் ஆமிர் கான். இந்தப் படத்தில் ஆமிர் கான் நடிக்கவில்லை.

ஹாட் ஸ்டார் ஓடிடியில் படத்தினை காணலாம். 

விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. விபின் தாஸ் இயக்கிய இந்தப்படம்  2022இல் வெளியாகி வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. 

இந்தப் படக் குறித்து ஆமிர்கான், “ஹாய் விபின், இது ஆமிகான். பிரசன்னாவிடமிருந்து உங்களுடைய எண்ணை வாங்கினேன். உங்களது ஜெய ஜெய ஜெய ஹே படம் பார்த்தேன். மிக அற்புதமான படம் அது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல அடுக்குகளை கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம்.

அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அவர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த அழகான படத்தினை எடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி விபின். இந்தப் படம் நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் என இதயத்திற்கு அளித்துள்ளது. உங்களுக்கு நேரம் இருக்கும்போது சொல்லுங்கள் இது குறித்து பேசலாம். நன்றி. அன்புடன் ஆமிர் கான்” என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

பின்னர் ஆமிர்கான் - விபின் தாஸ் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விபின் தாஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

டாக்காவில் மீண்டும் விசா மைய பணிகளைத் தொடங்கியது இந்தியா: வேறு இரு இடங்களில் பணி நிறுத்தம்

ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதாா் காலமானாா்

SCROLL FOR NEXT