பிரண்ட்ஸ் தொடர் புகழ் மேத்யூ பெர்ரி மறைவு!
பிரண்ட்ஸ் தொடரில் சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார்.
54 வயதான ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி, நேற்று (அக்.28) உயிழந்துள்ளார்.
மேத்யூ பெர்ரி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் வெந்நீர் குளியல் தொட்டியில் நினைவின்றி கிடந்துள்ளார் மாத்யூ. இதை கண்ட அவரது உதவியாளர் அவசர உதவிக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து சென்ற மருத்துவ குழுவால் அவரை மீட்க இயலவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
54 வயதான மாத்யூ பெர்ரி, பிரண்ட்ஸ் தொடர் மூலமாக அறியப்பட்டவர். 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான காமெடி தொலைகாட்சி தொடரில் சாண்ட்லர் பிங் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.
Advertisement
Advertisement
மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டிருந்த மாத்யூ, பல முறை மறுவாழ்வு சிகிச்சைக்கு சென்று திரும்பினார். 2018-ல் அதீத போதை பழக்கத்தால் பெருங்குடல் வெடிப்புக்கு ஆளானார், அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: காஸாவில் மீண்டும் இணைய சேவை: பாலஸ்தீனம்
தனது வாழ்வையும் போதை பழக்கத்தையும் முன்வைத்து சுயவரலாறு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.
கடைசி வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.