செய்திகள்

’லேபில்’ வெப்சீரிஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லேபில்’ வெப்சீரிஸ் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லேபில்' வெப்சீரிஸ்  நவம்பர் 10 முதல் ஒளிபரப்பாக உள்ளது. 

வித்தியாசமான களங்களில், படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன்,  பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தத் தொடரை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்த தொடருக்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்தத் தொடரில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோருடன் நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT