முகப்பு
செய்திகள்

லியோ வெற்றி விழா: ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை!

லியோ வெற்றி விழாக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 30 அக்டோபர் 2023, 5:58 pm IST
பகிர்:

லியோ வெற்றி விழாக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் முதல் வாரத்தில் மட்டும ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

Advertisement

Advertisement

லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், 200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், லியோ வெற்றி விழாக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி டிக்கெட்டுகள் அச்சிடுவதை தவிர்க்க, ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.