செய்திகள்

லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி 

நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 

DIN

நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் வாரத்தில் மட்டும ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

மேலும் விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையினரிடம் படத் தயாரிப்பு தரப்பு கடிதம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதில், லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். நேரு விளையாட்டு அரங்கிலுள்ள இருக்கைகளுக்கு ஏற்றவாறு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். 

அனுமதித்த எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT