செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் இறுகப்பற்று: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இறுகப்பற்று படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இறுகப்பற்று படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான யுவராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார்.

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இறுகப்பற்று திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவ.6-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

SCROLL FOR NEXT