முகப்பு
செய்திகள்

பார்க்கிங் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர், 2023 at 1:40 PM
பகிர்:

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது

Advertisement

இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான செல்லக் கள்ளியே பாடல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.

இந்நிலையில், பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.