ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஃபஹத் ஃபாசில்! கேரளத்திலேயே முதல் ஆளாம்!
நடிகர் ஃபகத் ஃபாசில் கேரளத்திலேயே முதல் ஆளாக லாண்ட்ரோவர் ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளத்திலும் தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன் அசாத்தியமான நடிப்பால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு படங்களுக்கு பல விருதுகளை குவித்துள்ளார்.
குறிப்பாக, இவர் நடிப்பில் வெளியான, ‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஜு’ ஆகிய படங்களில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழத்தினார்.
சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் மிரட்டியெடுத்து இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ரஜினிக்கு சொகுசு காரைப் பரிசளித்த கலாநிதி மாறன்!
இந்நிலையில், ஃபஹத் ஃபாசில் தன் திருமணநாளன்று ரூ.2.70 கோடி மதிப்புள்ள லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 90 (landrover defender 90) ரக சொகுசுக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவரே கேரளத்தில் இந்த ரகக் காரை முதலில் வாங்கிய நபர் என விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது!
ஏற்கனவே, ஃபஹத் தன் வீட்டில் போர்ச், மினி கன்ட்ரிமேன், லம்போகினி உரூஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ 740ஐ உள்ளிட்ட சொகுசுக் கார்களை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.