செய்திகள்

வெளியானது யுவன் பாடிய இறுகப்பற்று படப் பாடல்

'இறுகப்பற்று' படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'பிரியாதிரு' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.  

DIN

'இறுகப்பற்று' படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'பிரியாதிரு' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இறுகப்பற்று’. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். ஏற்கெனவே இவர் ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 
பொடன்ஷியல் ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'பிரியாதிரு' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT