செய்திகள்

காவல்துறை உங்கள் நண்பன் படத் தயாரிப்பாளர், கதாநாயகன் இணையும் 2வது திரைப்படம் !

காவல்துறை உங்கள் நண்பன் படத் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் இணையும் இரண்டாவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன் சார்பில் பாஸ்கரன் பி,  ராஜபாண்டியன் பி இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் படப்பிடிப்பு துவங்கியது. 

பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன் தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க கிராமத்து பின்னணியில்  வித்தியாசமாக புதிய காமெடி டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில் காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

முன்னதாக  பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன் தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு 'புரடக்‌ஷன் நம்.2' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தினை இயக்குநர் கே. பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தேனி, கொடைக்கானல், மதுரை, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபாபாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  

ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை -என்.ஆர். ரகுநந்தன், படத்தொகுப்பு - தினேஷ் போனுராஜ், கலை - சிஎஸ் பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளர் - என்.ஜே. சத்யா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT