செய்திகள்

விஜய் - 68 படத்தில் பிரபு தேவா, பிரசாந்த்?

விஜய் - 68 படத்தில் நடிகர்கள் பிரபு தேவா, பிரஷாந்த் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அப்பா-மகன் கதாபாத்திரத்தில்  நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும்  மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர். இந்த புகைப்படத்தினை வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில், இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவாவும் பிரஷாந்தும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT