செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பார்க்கிங் படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT