செய்திகள்

இது பிளாக்பஸ்டர்தான்.. ரசிகர்கள் பாராட்டில் இறைவன் டிரைலர்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

DIN

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.

மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இறுதிக்கட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. சைக்கோ கில்லர் கிரைம் பாணியில் உருவான இப்படத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ராகுல் போஸின் காட்சிகள்  பின்னணி இசையில்  அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இக்கதாபாத்திரத்திற்கு ‘ஸ்மைலி கில்லர் பிரம்மா’ என இயக்குநர் பெயரிட்டிருப்பதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால், இப்படம்  கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெரும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

SCROLL FOR NEXT