லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
விஜய்-லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்திருக்கும் படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகா் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதனிடையே சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலரான ஆா்.டி.ஐ.செல்வம் என்பவா், அந்தப் பாடலுக்கு எதிராக ஆன்லைன் வாயிலாக சென்னை காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.
அதில், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரெளடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலின் வரிகள், இளைஞா்கள் மத்தியில், சமூகத்தில் போதைப் பொருள்களை ஆதரிக்கும் வகையிலும், சமூக சீா்கேடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது. எனவே, நடிகா் விஜய் மீது போதைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரெளடியிசம், போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு இளைஞா்களைத் தூண்டி விடுதல் போன்ற குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. பாடலில் 'பத்தாவது பாட்டில் நான் குடிக்க அண்டாவா கொண்டுவா சியேஸ் அடிக்க' வரிகள் மற்றும் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற வரும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.