செய்திகள்

லியோ இசை வெளியீட்டு விழா எப்போது?: அப்டேட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!

லியோ இசை வெளியீட்டு விழா அப்டேட் கொடுத்துள்ளார் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவில் இங்கிலாந்தில் 10,000+ அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. 

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். 

இப்படத்தின் இரண்டாவது பாடல் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அடுத்த வாரம் இதுகுறித்த அப்டேட் வரும் என்றும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். முதல் பாடலான ‘நா ரெடி’ வெளியாகி யூடியூப்பில் 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் -23ஆம் தேதி  நடத்தப்படும் என தகவல் வெளியான நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில், “இந்த மாதம் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டுகளை மாவட்ட நிர்வாகிகளிடம் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT