செய்திகள்

போலா ஷங்கர்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

நடிகர் சிரஞ்சீவ் நடிப்பில் வெளியான போலா ஷங்கர் படத்தின் ஓடிடி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அஜித் நடித்து வெற்றி பெற்ற படம் வேதாளம். இதில் ஸ்ருதி ஹாசன், லக்‌ஷ்மி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. 

வேதாளம் படத்தினை தெலுங்கில் ரீமெக் செய்து நடிகர் சிரஞ்சீவி நடித்தார். இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள். படம் கடந்த மாதம் ஆக.11ஆம் தேதி வெளியானது. படத்தினை இயக்கியவர் மேஹர் ரமேஷ். 

ஜெயிலர் படத்தோடு வெளியான போலா ஷங்கர் படம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. ஜெயிலர் படத்திற்கு திரையரங்குகளில் அதிகரித்ததும் போலா ஷங்கர் படத்துக்கு குறைந்ததும் குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனத்துக்குள்ளான போலா ஷங்கர் வசூலிலும் பின்தங்கியதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் போலா ஷங்கர் நெட்பிளிக்ஸில் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேட்டைக்காரி... கோபிகா!

யாரும் இங்க 24/7 அரசியல்வாதி கிடையாது! - கமல்ஹாசன்

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 4 பேர் பலி

தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT