செய்திகள்

ஜீ-5 ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ஒரே படம்! 

DIN

ஜீ 5 ஓடிடி தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, டிடி ரிட்டர்ன்ஸ்  படம் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தில் சமீபத்தில் வெளியான  டிடி ரிட்டர்ன்ஸ்  படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. 

ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர்  எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் காமெடிப்படமாக வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்.

திரையரங்குகளில் மக்கள் வரவேற்பைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ஜீ 5 தளத்தில் வெளியானது.

நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  

நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு தீபக் குமார் மற்றும் படத்தொகுப்பு என் பி ஶ்ரீகாந்த் கையாண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ஜீ 5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ஜீ 5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது.  

குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம்  மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

டிடி ரிட்டர்ன்ஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5  நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்குபெறும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராயன் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன்!

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

SCROLL FOR NEXT