செய்திகள்

ஆசியக் கோப்பையில் வைரலாகும் லியோ!

இலங்கைக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டியில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவில் இங்கிலாந்தில் 10,000+ அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. 

முதல் பாடலான ‘நா ரெடி’ வெளியாகி யூடியூப்பில் 100 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த மாதத்தில் இசை வெளியீட்டு விழா நடக்குமென விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கையுடன் இன்று (செப்.12) மோதியது. முதல் பாதி இறுதியில் மழை குறுக்கிட்டு மீண்டும் தொடங்கியது.  213க்கு ஆல் அவுட்டானது இந்தியா. 

கிரிக்கெட் போட்டிக்கு நடுவே லியோவில் ‘நா ரெடி’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. ரசிகர்கள் பாடலுக்கு நடனமாடி உற்சாகமாகினார்கள். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT