முகப்பு
செய்திகள்

பிரபல பெண் இயக்குநர் இயக்கத்தில் யஷ்?

நடிகர் யஷ் பிரபல மலையாள பெண் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 12 செப்டம்பர், 2023 at 5:44 PM
பகிர்:

மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார்.

இந்நிலையில், நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவக் வெளியாகியுள்ளது. 

கேஜிஎஃப் - 2 படத்திற்குப் பின் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த யஷ், இப்படத்தில் இணைகிறார் என்கிற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.