செய்திகள்

ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை: விஜய் ஆண்டனி அறிக்கை! 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த  சம்பந்தமில்லையென நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். 

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த வாரங்களாக பேசு பொருளாகியுள்ளது. மேலும் சிலர் பாலியல் தொல்லைகளும் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டினார்கள். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பியளிக்கும் நடைமுறை நடந்து வருவதாக இசை நிகழ்ச்சி வெளியீட்டார்கள் கூறியுள்ளார்கள். 

இந்நிலையில் ஒரு யூடியூப்பில் இந்த இசை நிகழ்ச்சி பிரச்னைகளுக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனை மறுத்து விஜய் ஆண்டனி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் இவையனைத்தும் முற்றிலும் பொய்யே எனக் கூறியுள்ளார். மேலும் வதந்தி பரப்பிய அந்த யூடியூப் சேனலின்மீது மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்த மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT