செய்திகள்

ரசிகைக்கு நன்றி தெரிவித்த விஷால் பட நடிகை! 

நடிகர் விஷாலுடன் தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை பானுமதி ரசிகை ஒருவரின் விடியோவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

இயக்குநர் ஹரி இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான படம்தான் தாமிரபரணி. இதில் நடிகர் விஷாலுடன் நடிகை பானுமதி என்றழைப்படும் முக்தா நடித்திருந்தார். இவர்களுடன் பிரபு, நாசர், நதியா ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

நடிகை பானுமதி (முக்தா)

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் வரும் ‘தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி’ எனும் பாடல் மிகவும் புகழ் பெற்றது.

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷாலினி 

இந்தப் பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவில் வாழும் தமிழ்ப்பெண் ஷெல்ஃபி ஷாலு எனும் ஷாலினி ரீல்ஸ் செய்து பதிவிட்டு இருந்தார். அச்சு அசலாக நடிகை பானுமதி மாதிரியே தாவணி கட்டிக்கொண்டு நடனமாடி இருந்தார் ஷாலினி. இவர் எப்போதுமே 1980, 1990, 2000ங்களில் வெளிவந்த தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் உடையவர். 

இந்த விடியோவிற்கு நடிகை பானுமதி (முக்தா), “நன்றி டியர்” என கமெண்ட் செய்துள்ளார். 

நடிகை பானுமதியின் மகள் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் கடைசியாக பாம்பு சட்டை படத்தில் நடித்திருந்தார். 

தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஷாலின் மார்க் ஆண்டனி படம் செப்.15இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக விஷால் புதிய படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT