முகப்பு
செய்திகள்

அல்லு அர்ஜுனுக்குக் கதை சொன்ன நெல்சன்!

நடிகர் அல்லு அர்ஜுனிடம் இயக்குநர் நெல்சன் தன் அடுத்தத் திரைப்படத்திற்காகக் கதை சொல்லியதாகக் கூறப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:16 PM
பகிர்:

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. 

தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் த.செ.ஞானவேல் படங்களில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைச் சந்தித்து தன் அடுத்தத் திரைப்படத்திற்கான கதையைச் சொன்னதாகவும் அது அல்லு அர்ஜுனுக்கு பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - படத்தில் நடித்து வருகிறார். அதன்பின், இயக்குநர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →