தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அட்லி - பிரியா, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிகள் கலந்து கொண்டனர்.
மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை இரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் கலந்துகொள்ள அரசியல் தலைவர்கள், இந்திய திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில், பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் அட்லியும் அவரது மனைவியும், இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இரு ஜோடிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிக்க | ஆஸ்கருக்கு செல்லும் ஜவான்?: அட்லி கூறியது என்ன?
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி ரூ.1,000 கோடி வசூலை எட்டவுள்ள ஜவான் திரைப்படத்தை அட்லி இயக்கினார். அதில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.