செய்திகள்

கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று டிரைலர்!

இறுகப்பற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த  ‘போட்டா போட்டி’ படத்தினை இயக்கியவர் யுவராஜ் தயாளன். பின்னர் வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி மக்களிடையே கவனம் பெற்ற யுவ்ராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார். 

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன். 

நடிகர் விக்ரம் பிரபுவின் பொன்னியி செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல கவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் வித்தார்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே நடித்து வருகிறார். வழக்கு என் 18/9 இல் அறிமுகமாகி லோகேஷின் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படமாக இறுகப்பற்று படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

எஸ் ஆர்பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு, பி கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தினை பொடென்சியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி வழங்குகிறது. இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார். 

முன்னதாக, இப்படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எதிர்படுத்திய நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT