இறைவன் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன் விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | நாக சைதன்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சாய் பல்லவி
இப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். ரன்னிங் டைம் 2.33 மணி நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை 4.05 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
முன்னதாக, இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.