செய்திகள்

தன் ஆசிரியரை சந்தித்த சூர்யா!

நடிகர் சூர்யா தன் ஆசிரியர் ஒருவரைச் சந்தித்த நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லயோலா கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சூர்யா தன் கல்லூரி பேராசிரியரை சந்தித்துள்ளார்.

அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, “லயோலா கல்லூரி வணிகவியல் துறையின் தலைவராக(1995 பேட்ஜ்) இருந்த என் வழிகாட்டி, பேராசிரியர் டாக்டர்.எம்.ராபர்ட் அவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றது சிலிர்ப்பாக இருந்தது. உங்கள் பிராத்தனைகளுக்கு நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT