செய்திகள்

சலார் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர்  பிரபாஸின் சலார் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம்  வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தேதியை மாற்றுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படம் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ரஷியா - உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

SCROLL FOR NEXT