முகப்பு
செய்திகள்

நான் மன்னிப்புக் கேட்கிறேன் சித்தார்த்: சிவ ராஜ்குமார்

கன்னட அமைப்பினரால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த்திடம் நடிகர் சிவ ராஜ்குமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Updated On : 29 செப்டம்பர், 2023 at 2:42 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:33 AM

சித்தா திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வுக்காக நடிகர் சித்தார்த் நேற்று பெங்களூரு சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கன்னட அமைப்பினர் உள்ளே நுழைந்து, காவிரி விவகாரத்தைக் குறிப்பிட்டு தமிழ்ப் படங்களுக்கும் நடிகர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூச்சலிட்டனர். 

மேலும், கன்னட அமைப்பினர் அதிகம் கூடி ஆரவாரங்களை எழுப்பியதால் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில், நடிகர் சிவ ராஜ்குமார், “சினிமா நிகழ்ச்சியிலிருந்து சித்தார்த் வெளியேற்றப்பட்டது வேதனையளிக்கிறது. அனைத்து மொழிப்படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் கன்னடர்கள். அவர்கள் சார்பில் சித்தார்த்திடம்  மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.