முகப்பு
செய்திகள்

விஜய்க்கு தம்பியாக நடிக்கும் ஜெய்?

நடிகர் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்துகட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்திற்குப் பின்,  விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுப்பதற்காக விஜய் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், விஜய் - 68 படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →