தோழியை மனைவியாக்கிய சின்னத்திரை நடிகர்!
சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
சின்னத்திரை நடிகர் அஜய் பரத் தனது நீண்ட நாள் தோழியை மனைவியாக கரம்பிடித்தார். சமீபத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர் அஜய் பரத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெய்வம் தந்த பூவே தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகர் அஜய் பரத். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
அஜய் பரத் தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அப்போது முதலே இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
தற்போது நீண்ட நாள் தோழியை இரு வீட்டார் சம்மதத்துடன் மனைவியாக கரம்பிடித்த அஜய்க்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.