முகப்பு
செய்திகள்

அசோக் செல்வனின் சபா நாயகன்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கல் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

இந்தாண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் மிகுந்த வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணமும் செய்தார்.  

சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தற்போது அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 

சபா நாயகன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. புயலின் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி மாற்றமடைந்துள்ளது. டிச.22ஆம் தேதி படம் வெளியாகுமென அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →