ஏலியனுக்குக் குரல் கொடுத்த சித்தார்த்!
அயலான் திரைப்படத்தில் டப்பிங் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம். .
இதையும் படிக்க: அயலான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இதை செய்தால் போதும்: படக்குழு அறிவிப்பு!
Advertisement
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையும் படிக்க: சூர்யாவுக்கு நன்றி!: அமீர்
இந்நிலையில் அயலானில் இடம்பெறும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.