முகப்பு
செய்திகள்

’லியோ’ படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், தற்போது நடிகர்கள், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன்களைக் கொண்டு வரக்கூடாது என கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க தனி குழுவையும் படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்.

முன்னதாக, விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா நடித்த காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →