முகப்பு
செய்திகள்

’விஜய் 67’ படத்தில் மற்றொரு பிரபல இயக்குநர்!

விஜய் 67 படத்தில் பிரபல இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

விஜய் 67 படத்தில் பிரபல இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

முன்னதாக, விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாகவும் பின்னர் தேதி பிரச்னையில் அவர் விலகியதால் நடிகர் விஷால் இணைந்துள்ளதாக பேசப்பட்டது.

அதன்பின், விஷாலுக்குப் பதிலாக நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சம்பளமாக ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும், இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது ’விஜய் 67’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் அதில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →