முகப்பு
செய்திகள்

நா ரெடி பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்: வைரல் விடியோ 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். 

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் துள்ளல் இசைப் பாடலாக உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். 

இன்ஸ்டாகிராமிலும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் நா ரெடி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →