முகப்பு
செய்திகள்

கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 26 ஜூலை, 2023 at 5:44 PM
பகிர்:


நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடியாக உருவாகியுள்ள டீசர் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை வரும் 28-ம் தேதி நள்ளிரவு 12.01-க்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.