முகப்பு
செய்திகள்

’தந்தையால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்..’: குஷ்பு வேதனை

தன் தந்தையால் 8 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

தன் தந்தையால் 8 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும் தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளார்.

அதில், ‘என் தந்தை மனைவி, மகளை அடிப்பதையும் பெண் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் பிறப்புரிமையாக நினைத்தவர். நான் 8 வயதில் என் அப்பாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். இதுகுறித்து என் அம்மாவிடம் சொன்னாலும் அவர் நம்பியிருக்க மாட்டார். காரணம், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்கிற மனநிலையில் இருந்தார். ஒருகட்டத்தில் என் 15-வது வயதில் இதற்குமேல் பொறுக்க முடியாத நிலை வந்தபோதுதான் தைரியமாக என் தந்தையிடம் இதுகுறித்து பேச முடிந்தது. அவரோ என் 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் எனத் தெரியாத வறுமை. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளின் வடுக்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சொந்த தந்தைக்கு எதிரான குஷ்புவின் இந்தப் வெளிப்படையான பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments