முகப்பு
செய்திகள்

அஜித் பிறந்தநாளில் வெளியான கேங்க்ஸ்டா பாடல்! 

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளில் துணிவு படத்திலிருந்து கேங்க்ஸ்டா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

Updated On : 1 மே, 2023 at 9:53 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:23 AM

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து. தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

Advertisement

முன்னதாக நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் கதை குளறுபடியால் தற்போது அந்த வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொண்டாட்டம் தொடங்கியது. துணிவு படத்திலிருந்து கேங்க்ஸ்டா பாடல் வெளியானது” என தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.