செய்திகள்

தோனி தயாரித்த தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவான தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்‌ஷியும். 

அதன்படி, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மாரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு போன்றோர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்,  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்: தயாா் நிலையில் திருத்தோ்கள்

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண விருந்துக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்கலாம்

மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாதவா் மதுரை மாா்க்சிஸ்ட் வேட்பாளா்: பிரமேலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

சித்திரைத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா், காவல் ஆணையா் ஆய்வு

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பணியிடம் தோ்வு

SCROLL FOR NEXT