முகப்பு
செய்திகள்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 17 மே, 2023 at 5:47 PM
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

Advertisement

இப்படம் ஆகஸ்ட்  10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சனை அழைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.