இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி!
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 14ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் மிஷ்கின் கூறியதாவது:
லியோவில் சிறிய எதிர்மறையான கதாபாத்திரம் செய்துள்ளேன். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு மாவீரனில் நான்தான் முக்கியமான வில்லன். சிவகார்த்திகேயனை செம்மையாக அடித்து விட்டேன். வேஷ்டி சட்டையில் கலக்கியிருக்கிறேன். சிவகார்த்திகேயன் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. படம் கண்டிப்பாக ஹிட்டாகும்.