முகப்பு
செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா?

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் அவருக்கு நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், சூர்யா - 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அதிதி ஷங்கரை நாயகியாக்க படக்குழு முடிவு செய்திருந்ததாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →