செய்திகள்

பிரபல நடிகரைக் காதலிக்கும் பூஜா ஹெக்டே?

நடிகை பூஜா ஹெக்டே பிரபல நடிகரைக் காதலிப்பதாகத் தகவல்.

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது, தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே, நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.

தற்போது, இருவரும் ஒரே காரில் ஊர் சுற்றும் விடியோ வெளியாகியுள்ளது. இதனால், பூஜா நடிகர் ரோகனைக் காதலிப்பது உண்மைதான் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும்..! வித் லவ் படத்தின் புதிய பாடல்!

SCROLL FOR NEXT