செய்திகள்

புஷ்பா - 2 டீசர் தேதி!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா - 2 படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது.

தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வருகிற ஏப்.8 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புஷ்பா - 2 ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT