செய்திகள்

தீவிர உடற்பயிற்சியில் சூர்யா - ஜோதிகா!

நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இணைந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது.

DIN

உடலைப் பராமரிக்கும் நடிகர்களில் உதாரணமாக இருப்பவர் நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் நாயகனாக ஆச்சரியப்படுத்திய சூர்யா, இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார்.

தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர், உடலை வளைத்து தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்யும் விடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். அந்த வகையில், முதல்முறையாக, அவரும் சூர்யாவும் இணைந்து உடற்பயிற்சி செய்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவைப் பார்த்த பலரும், இணைகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்குத் தயாராகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT