செய்திகள்

ரயிலில் பயங்கரம்.. நடிகரைக் கொன்ற வடமாநிலத் தொழிலாளி!

ரயில் டிக்கெட் பரிசோதகரும் நடிகருமான வினோத்தை வடமாநிலத் தொழிலாளி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மலையாள சினிமாவில் புலிமுருகன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்து கவனம் பெற்றவர் கே.வினோத். இவர், ரயில் டிக்கெட் பரிசோதகராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.2) இரவு பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்திலிருந்து ஈரோடு வரை டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் இருந்திருக்கிறார்.

அப்போது, ரயில் திருச்சூர் தாண்டியதும் டிக்கெட் இல்லாமல் பயணித்த வடமாநிலத் தொழிலாளிகளிடம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கச் சொன்னதுடன் ரூ.1000 அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, வடமாநிலத் தொழிலாளி ஒருவருக்கும் வினோத்தும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அந்த நேரத்தில், கதவருகே நின்றிருந்த வினோத்தை அத்தொழிலாளி ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக, மற்றொரு இருப்புப்பாதையில் வந்துகொண்டிருந்த ரயிலில் உடல்நசுங்கி வினோத் இறந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், காவல்துறைக்கு தகவலைச் சொல்ல நடிகர் வினோத்தைத் தள்ளிவிட்ட வடமாநிலத் தொழிலாளி பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஓரிஸாவைச் சேர்ந்த அத்தொழிலாளியின் பெயர் ரஜினிகாந்த் என்றும் சம்பவத்தன்று அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்திருக்கிறது.

சினிமாவின் மீதான ஆசையில் டிக்கெட் பரிசோதகர் பணியுடன் நடித்துக் கொண்டிருந்தவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT